அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

Spotifyயின் அணுகல்தன்மைத் திட்டம்

அறிமுகம்

இயலாமைகள் கொண்ட நபர்கள் உட்பட அனைத்து மக்களையும் அவர்களின் தன்மானம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு மரியாதை அளிக்கும் வகையில் நடத்துவதில் Spotify உறுதியாக உள்ளது. ஒருமைப்பாட்டிலும் சம வாய்ப்பிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இயலாமைகள் கொண்ட நபர்களின் தேவைகளைத் தக்க நேரத்தில் பூர்த்திசெய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும், சாத்தியமுள்ள அனைத்து இடங்களிலும் அணுகல்தன்மைக்கு உள்ள தடைகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்கு நாங்கள் பணிபுரிவோம். இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கும் இயலாமைகள் கொண்ட நபர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் Spotify எடுத்துவரும் படிகள் குறித்து இந்த அணுகல்தன்மைத் திட்டம் (அல்லது திட்டம்) விவரிக்கிறது.

இந்த அணுகல்தன்மைத் திட்டம் குறித்தோ Spotifyயில் அணுகல்தன்மை குறித்தோ இன்னும் விரிவாக கருத்துகளைப் பெற விரும்புகிறோம். எங்களின் அணுகல்தன்மை மையத்தில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் நீங்கள் கருத்தைப் பகிரலாம் (இதில் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கருத்தைச் சமர்ப்பிக்கலாம்).

இந்தத் திட்டம் மற்றும் எங்கள் கருத்துச் செயல்முறை குறித்த விளக்கம் எங்களின் அணுகல்தன்மை மையத்தில் உள்ளன. திட்டம், கருத்துச் செயல்முறை குறித்த விளக்கம் ஆகிய இரண்டும் அச்சு, பெரிய அச்சு, பிரெய்ல் மற்றும் ஆடியோ வடிவங்களில் உள்ளன. கோரிக்கைகளுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிப்போம்.

நிர்வாகச் சுருக்கம்

Spotifyயின் அணுகல்தன்மைத் திட்டம் என்பது இயலாமை கொண்ட நபர்களைப் பாதிக்கக்கூடிய தடைகளை நீக்கும் எங்கள் முயற்சிகளைத் தொடர்வதற்கான 3 வருட உறுதிப்பாடாகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு செயல்பாடுகளுடன் கூடுதலாக—இயலாமை சமத்துவ மதிப்பீட்டில் (Disability Equality Index) பங்குபெறுதல், பணியமர்த்தல் செயல்முறைகளையும் அலுவலக அணுகல்தன்மை வழிகாட்டுதல்களையும் புதுப்பித்தல், அணுகல்தன்மைப் பயிற்சிகளை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் சேவையில் அணுகல்தன்மையை மேம்படுத்துதல், தகவல்தொடர்புக்கான சிறந்த நடைமுறைகளைத் தரநிலைப்படுத்துதல் போன்ற செயல்கள் மூலம் அணுகல்தன்மை தொடர்பான தடைகளுக்குத் தீர்வுகாண்போம். இந்தத் திட்டம் இயலாமைகள் கொண்ட நபர்களின் தேவைகளைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்யும் வகையில். அவர்களுடன் கலந்துரையாடி உருவாக்கப்பட்டதாகும்.

முக்கியச் சொற்கள்

பின்வரும் சில சொற்கள் திட்டம் முழுவதும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். ஏதேனும் சொல் இங்கே வரையறுக்கப்படவில்லை என்றால், அதை முதல்முறை பயன்படுத்தும்போது நாங்கள் வரையறுப்போம்.

மாற்றுத்திறனாளிக்கான வடிவமைப்புகள்: இயலாமைகள் கொண்ட நபர்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சூழல்சார் தொழில்நுட்பத்துடன் இணங்கக்கூடிய அச்சு, பெரிய அச்சு, பிரெய்ல், ஆடியோ வடிவம் அல்லது மின்னணு வடிவத்தைக் குறிப்பிடுகிறது.

தடை: உடல், மனம், அறிவு, புத்தி, கற்றல், தகவல்தொடர்பு அல்லது உணர்திறன் சார்ந்த குறைபாடு, செயல்பாட்டுக் குறைபாடு ஆகியவை உட்பட இயலாமை கொண்ட நபர்கள் சமுதாயத்தில் முழுமையாகவும் சமமாகவும் பங்கேற்பதில் தடை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களும் "தடை" என்று கூறப்படும், இதிலடங்குபவை:

  • உடல்ரீதியான தடை
  • கட்டுமானம் சார்ந்த தடை
  • தகவல் அல்லது தகவல்தொடர்புகள் சார்ந்த தடை
  • அணுகுமுறை நடத்தை சார்ந்த தடை
  • தொழில்நுட்பம் சார்ந்த தடை
  • கொள்கை அல்லது நடைமுறையின் காரணமாக ஏற்படும் அனைத்துத் தடைகளும்

இயலாமை: "இயலாமை" என்பது உடல், மனம், அறிவு, புத்தி, கற்றல், தகவல்தொடர்பு அல்லது உணர்திறன் சார்ந்த குறைபாடு, செயல்பாடு சார்ந்த குறைபாடு உள்ளிட்ட அனைத்துக் குறைபாடுகளையும் குறிப்பதாகும். அவை நிரந்தரமானவையாகவோ தற்காலிகமானவையாகவோ அவ்வப்போது நிகழக்கூடியவையாகவோ தெளிவாகத் தெரியக்கூடியவையாகவோ தெரியாதவையாகவோ இருக்கலாம். ஒரு தடையை எதிர்கொள்ளும்போது சமூகத்தில் ஒரு நபர் முழுமையாகவும் சமமாகவும் பங்கேற்பதை அது தடைசெய்கிறது.

WCAG: "WCAG" என்பது World Wide Web Consortium அமைப்பால் வெளியிடப்பட்ட இணைய உள்ளடக்க அணுகல்தன்மை வழிகாட்டுதல்களின் மிகச் சமீபத்திய பதிப்பைக் குறிக்கிறது.