அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

கருத்துச் செயல்முறை

பின்வரும் சேனல்கள் மூலம் தனிநபர்கள் கருத்தை வழங்கலாம்:

  • அணுகல்தன்மைக் கருத்துப் படிவம்: அணுகல்தன்மை மையம்
  • வாடிக்கையாளர் உதவிச் சேவை: பொதுவான கேள்விகள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு எங்கள் ஆதரவுத் தளத்தைப் பாருங்கள்.
  • Be My Eyes (BME): காட்சி உதவிக்காக வீடியோ அழைப்புகள் மூலம் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கு உதவுவதற்காக Be My Eyes நிறுவனத்துடன் Spotify கூட்டு சேர்ந்துள்ளது.

செயல்முறை விவரங்கள்

தனிநபர்கள் அடையாளத்தை வெளிப்படுத்தமல் கருத்தை வழங்கலாம் அல்லது Spotify பின்தொடர்ந்து அறிவிப்புகளை வழங்குவதற்கு வசதியாக தொடர்புத் தகவலைச் சமர்ப்பிக்கலாம்.

அணுகல்தன்மை தொடர்பான கருத்துகளைப் பெற்றதும், Spotify இவற்றைச் செய்யும்:

  1. கருத்து கிடைத்ததாக உடனடியாகப் பதிலளித்தல்.
  2. நிறுவனத்திற்குள்ளாக கருத்தை மதிப்பாய்வு செய்து விசாரித்தல்.
  3. பொருத்தமான நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் அல்லது உடனடியாக மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லாத நிலையில் அதுகுறித்துத் தெளிவுபடுத்துதல்.
  4. கருத்தைச் சமர்ப்பித்த நபர்களுக்கு (தொடர்புத் தகவல்கள் இருந்தால்) அறிவிப்புகளை வழங்குதல்

தனியுரிமை தொடர்பான உறுதிப்பாடு

கருத்துத் தெரிவிப்பதற்கான சேனல்கள் மூலம் வழங்கப்படும் தனிப்பட்ட தகவல்கள் வழக்கமான தரவு ரகசியத்தன்மை வழிகாட்டுதல்கள், தக்கவைத்தல் கொள்கைகள், எங்களின் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றின்படி கையாளப்படுவதை Spotify உறுதிசெய்கிறது. சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் உங்கள் கருத்து குறித்து விசாரித்தல், உங்களைத் தொடர்புகொள்ளுதல் (கோரப்பட்டால்), அணுகல்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.