Spotify குக்கீ கொள்கை
பிப்ரவரி 25, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது
2. குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
3. குக்கீகளையும் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களையும் நிர்வகிப்பதற்கான விருப்பத்தேர்வுகள்
4. இந்தக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள்
5. எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்
குக்கீகளையும் அதைப் போன்ற பிற தொழில்நுட்பங்களையும் (ஒட்டுமொத்தமாக "குக்கீகள்" என்று அழைக்கப்படும்) Spotify எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. இப்போதிலிருந்து இதைக் 'கொள்கை' என்று குறிப்பிடுவோம். குக்கீகள் மற்றும் அதைப் போன்ற தொழில்நுட்பங்களை Spotify பயன்படுத்துவது குறித்த தெளிவான தகவல்களை உங்களுக்கு வழங்குவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். Spotifyயின் சேவைகளையோ இணையதளங்களையோ (ஒட்டுமொத்தமாக 'சேவைகள்' என்று அழைக்கப்படும்) பயன்படுத்தும் அனைவருக்கும் இது பொருந்தும். உங்கள் குக்கீ அமைப்புகளை நிர்வகிப்பது தொடர்பான உங்களுக்கான விருப்பத்தேர்வுகள் குறித்தும் இந்தக் கொள்கை விளக்குகிறது.
1. குக்கீகள் என்றால் என்ன?
குக்கீகளும், அதே போன்ற தொழில்நுட்பங்களும் (எ.கா., பிக்ஸல் குறிச்சொற்கள்) உங்கள் சாதனங்களில் பதிவிறக்கப்படும் சிறிய கோப்புகள் ஆகும். இந்தக் கொள்கையில் அவற்றை ஒட்டுமொத்தமாக "குக்கீகள்" என்று குறிப்பிடுவோம். Spotify உடைமைகளை நீங்கள் பயன்படுத்தும்போது இந்தக் கோப்புகள் உங்கள் சாதனத்தில் சேர்க்கப்படும். உதாரணமாக, நீங்கள் எங்கள் இணையதளத்திற்குச் செல்லும்போதோ எங்கள் செயலியைப் பயன்படுத்தும்போதோ எங்களின் ஏதேனும் விளம்பரத்தில் செயல்களை மேற்கொள்ளும்போதோ நாங்கள் அனுப்பும் மின்னஞ்சலைத் திறக்கும்போதோ இது நடக்கலாம். உங்கள் சாதனத்தைத் தனித்துவமாக அடையாளம் காண Spotifyக்கும் எங்கள் கூட்டாளர்களுக்கும் குக்கீகள் உதவுகின்றன. உங்களுக்குத் தொடர்ச்சியான அனுபவத்தை வழங்கவும் இவை உதவுகின்றன. உதாரணமாக, உங்கள் விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும் உங்களின் முந்தைய செயல்பாடுகளை நினைவில் கொள்ளவும் குக்கீகள் எங்களுக்கு உதவக்கூடும். பின்வரும் இணையதளத்திற்குச் சென்று குக்கீகள் குறித்த மேலும் பொதுவான தகவல்களைக் காணலாம்: www.allaboutcookies.org.
2. குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
குக்கீகள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. வெவ்வேறு பக்கங்களுக்கு இடையே திறம்பட நகர்வதற்கு அவை உதவுகின்றன. அவை உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்வதுடன் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் விளம்பரங்கள் உங்களுக்கும் உங்கள் ஆர்வங்களுக்கும் தொடர்புடையவையாக இருப்பதை உறுதிசெய்யவும் அவை உதவலாம்.
Spotify முக்கியமான இரண்டு குக்கீ வகைகளைப் பயன்படுத்துகிறது: (1) கட்டாயம் தேவைப்படும் குக்கீகள், (2) விருப்பத்திற்குரிய குக்கீகள்:
- *கட்டாயம் தேவைப்படும் குக்கீகள்
இந்தக் குக்கீகள் Spotify மூலமோ எங்கள் சார்பாக மூன்றாம் தரப்பினரின் மூலமோ அமைக்கப்படுகின்றன. எங்கள் சேவைகளின் அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு இவை அவசியமானவை. உள்ளடக்கத்தைப் பார்த்தல், தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைத்தல், உள்நுழைதல், சேவைகளுக்காகப் பணம் செலுத்துதல், படிவங்களை நிரப்புதல் போன்ற விஷயங்களைச் செய்ய இவை உங்களுக்கு உதவுகின்றன. இந்தக் குக்கீகள் இல்லாமல் எங்கள் சேவைகளை வழங்க முடியாது. எனவே இந்தக் குக்கீகளை நீங்கள் நிராகரிக்க முடியாது.
- *விருப்பத்திற்குரிய குக்கீகள்
விருப்பத்திற்குரிய குக்கீகள் 'முதல் தரப்புக் குக்கீகளாகவோ' 'மூன்றாம் தரப்புக் குக்கீகளாகவோ' இருக்கக்கூடும். முதல் தரப்புக் குக்கீகள் Spotifyயால் நேரடியாக அல்லது எங்களின் கோரிக்கையின் பேரில் மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படுகின்றன. மூன்றாம் தரப்புக் குக்கீகள் மூன்றாம் தரப்பினரால் நேரடியாக அல்லது மூன்றாம் தரப்பினரின் (எங்களின் பகுப்பாய்வு அல்லது விளம்பரச் சேவை வழங்குநர்கள் போன்றவை) கோரிக்கையின் பேரில் Spotifyயால் அமைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டாளர்களின் பட்டியலை இந்த இணைப்பில் பார்க்கலாம். Spotify அல்லது எங்கள் கூட்டாளர்களால் விருப்பத்திற்குரிய குக்கீகள் பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன:
|
குக்கீ வகை |
நோக்கம் |
|---|---|
|
கட்டாயம் தேவைப்படும் குக்கீகள் |
தொழில்நுட்ப ரீதியில் உள்ளடக்கத்தை வழங்குதல், உங்கள் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைத்தல், உள்நுழைதல், பேமெண்ட்டுகளைச் செய்தல், படிவங்களை நிரப்புதல் போன்ற அம்சங்களை எங்கள் சேவைகளில் நீங்கள் பயன்படுத்த அனுமதிப்பதற்கு இந்தக் குக்கீகள் தேவைப்படுகின்றன. இந்தக் குக்கீகள் இல்லாமல் எங்கள் சேவைகளை வழங்க முடியாது. எனவே இந்தக் குக்கீகளை நீங்கள் நிராகரிக்க முடியாது. |
|
செயல்திறன் குக்கீகள் |
பார்வையாளர்கள் எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த தகவல்களை இந்தக் குக்கீகள் சேகரிக்கின்றன. உதாரணமாக, இந்தக் குக்கீகள் எங்கள் வலைதள வருகைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவும், பார்வையாளர்கள் வலைதளத்தை எப்படிக் கண்டறிந்தனர் என்பதைப் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு உதவுகின்றன. வலைதளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகத் தரவைச் சேகரிப்பதற்குக் குக்கீகளைப் பயன்படுத்தும் வலைப் பகுப்பாய்வுகள் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். உதாரணமாக, வடிவமைப்புகளைப் பரிசோதிப்பதற்கும் பயனர்களுக்கு ஒரே மாதிரியான தோற்றத்தையும் பயனர் அனுபவத்தையும் தருவதை உறுதிப்படுத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படலாம். நாங்கள் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்திமடல்கள் அல்லது பிற தகவல்தொடர்புகள் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். செய்திமடலைத் திறத்தல், அதைப் பிறருக்கு அனுப்புதல், அதிலுள்ள உள்ளடக்கத்தைக் கிளிக் செய்தல் போன்றவையும் இதில் அடங்கும். இந்தத் தகவல்கள் மூலம் எங்களின் செய்திமடலின் செயல்திறனை நாங்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் உங்களுக்கு ஆர்வமுள்ள தகவல்களை நாங்கள் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இந்தத் தகவல்கள் உதவும். செயல்பாடு/ஆர்வம் அடிப்படையில் இலக்கிடும் விளம்பர நெட்வொர்க்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் குக்கீகள் இந்த வகையில் அடங்காது. |
|
செயல்பாட்டுக் குக்கீகள் |
பயனர் பெயர், மொழி, நீங்கள் வாழும் பகுதி போன்ற உங்கள் தேர்வுகளை நினைவில் கொள்ளவும் மேம்படுத்தப்பட்ட, மிகவும் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் உள்ளடக்கங்களை வழங்கவும் எங்கள் சேவைகளை இந்தக் குக்கீகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் பிரத்தியேகமாக்கக்கூடிய வலைப் பக்கங்களில் நீங்கள் செய்த மாற்றங்களை நினைவில் கொள்ள இந்தக் குக்கீகள் பயன்படுத்தப்படலாம். உங்கள் அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் செய்யும் தேர்வுகளை இந்தக் குக்கீகள் நினைவில் கொள்கின்றன. நீங்கள் இந்தக் குக்கீகளை அனுமதிக்கவில்லை எனில், எங்கள் சேவைகளில் இதற்கு முன்னர் நீங்கள் செய்த தேர்வுகள் சேமிக்கப்படாது. |
|
பிரத்தியேகமான அல்லது விளம்பரப்படுத்தல் குக்கீகள் |
உங்களுக்கு அதிகம் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்காகவும் உங்கள் ஆர்வங்களைப் புரிந்துகொள்வதற்காகவும் உங்கள் உலாவுதல் பழக்கங்கள் குறித்த தகவல்களை இந்தக் குக்கீகள் சேகரிக்கும். ஒரு விளம்பரம் உங்களுக்குக் காட்டப்படுவதற்கான எண்ணிக்கையை வரம்பிடுதல், Spotify பகிரும் விளம்பரங்களின் செயல்திறனை அளவிடுதல் போன்றவற்றுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குக்கீகள் நீங்கள் ஒரு வலைதளத்திற்குச் சென்றதைப் பதிவுசெய்கின்றன. விளம்பரதாரர்கள் போன்ற பிற நிறுவனங்களுடன் இந்தத் தகவல்கள் பகிரப்படலாம். அத்துடன், Spotify சலுகைகள், அம்சங்கள், புதிய வெளியீடுகள் போன்றவற்றைப் பிற தளங்களில் விளம்பரப்படுத்துவதற்காக அந்தத் தளங்களுடன் குறிப்பிட்ட தரவை Spotify பகிரலாம். நீங்கள் இந்தக் குக்கீகளை அனுமதிக்கவில்லை என்றாலும் விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு மிகவும் தொடர்புடையவையாக இருக்காது. |
3. குக்கீகளையும் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களையும் நிர்வகிப்பதற்கான விருப்பத்தேர்வுகள்
வலை உலாவி அமைப்புகள்
உங்கள் வலை உலாவி அமைப்புகளைப் பயன்படுத்தி குக்கீகளை ஏற்கலாம், நிராகரிக்கலாம் மற்றும் நீக்கலாம். இதைச் செய்ய, உங்கள் உலாவியால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும் (பொதுவாக 'உதவி', 'கருவிகள்' அல்லது 'திருத்துதல்' அமைப்புகளுக்குள் இருக்கும்).
குக்கீகளை நிராகரிக்குமாறு உங்கள் உலாவியை அமைத்திருந்தால் உங்களால் Spotify வலைதளத்தின் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, www.allaboutcookies.org என்ற வலைதளத்திற்குச் செல்லவும்.
மொபைல் அடையாளங்காட்டிகள்
பிரத்தியேக விளம்பரங்களிலிருந்து விலகவோ 'மொபைல் அடையாளங்காட்டிகளை' மீட்டமைக்கவோ உங்கள் மொபைல் சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உங்களை அனுமதிக்கக்கூடும். உதாரணமாக, iOS சாதனங்களில் 'Allow Apps to Request to Track' என்ற அமைப்பையோ Android சாதனங்களில் 'Opt out of Interest-Based Ads' என்ற அமைப்பையோ பயன்படுத்தலாம். செயலிகளின் உங்கள் உபயோகம் குறித்த தகவல்கள் உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் வரம்பிட இந்த அமைப்புகள் அனுமதிக்கின்றன.
பிரத்தியேக விளம்பரங்களுக்கான நிலைமாற்றி
Spotify சேவையில் பிரத்தியேக விளம்பரங்களைப் பெறுவதற்கான ஒப்புதலை நீங்கள் நீக்கலாம். இதைச் செய்ய, உங்கள் Spotify கணக்கின் கணக்குத் தனியுரிமைப் பக்கத்தில் உள்ள பிரத்தியேக விளம்பரங்களுக்கான நிலைமாற்றியை ஆஃப் செய்யவும். பிரத்தியேக விளம்பரங்களுக்கான நிலைமாற்றியை ஆஃப் செய்தால், மூன்றாம் தரப்பு விளம்பரக் கூட்டாளர்களுடன் உங்கள் தகவல்களைப் பகிர்வதை Spotify நிறுத்தும். அவர்களது தகவல்களைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிரத்தியேக விளம்பரங்களைக் காட்டுவதையும் Spotify நிறுத்தும். உங்கள் Spotify பதிவு விவரங்கள், நிகழ்நேரத்தில் Spotifyயை நீங்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து சேவைகளில் விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். இருப்பினும், இந்த விளம்பரங்கள் உங்களுக்கு மிகவும் தொடர்புடையதாக இல்லாமல் இருக்கக்கூடும்.
Spotify அல்லது எங்கள் சார்பாகச் சேவை வழங்குநரால் காட்டப்படும் சில பிரத்தியேக விளம்பரங்களில் 'விளம்பர விருப்பத்தேர்வுகள்' ஐகான் இருக்கக்கூடும். இந்த ஐகான் மூலமாகவோ அதை ஒத்த கருவி மூலமாகவோ பிரத்தியேக விளம்பரங்களைப் பெறுவதற்கான ஒப்புதலை நீக்கலாம். AdChoices ஐகானைக் கிளிக் செய்தோ www.aboutads.info என்ற பக்கத்திற்குச் சென்றோ நீங்கள் பின்வருபவற்றைச் செய்யலாம்:
- பிரத்தியேக விளம்பரப்படுத்தலுக்காக உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்; அல்லது
- டிஜிட்டல் விளம்பரக் கூட்டமைப்பில் (Digital Advertising Alliance - DAA) இணைந்துள்ள நிறுவனங்கள் பிரத்தியேக விளம்பரப்படுத்தலுக்காக உங்கள் தரவைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை நீக்கலாம்.
4. இந்தக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள்
நாங்கள் இந்தக் கொள்கையில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்யக்கூடும்.
இந்தக் கொள்கையில் அடிப்படை மாற்றங்களைச் செய்யும்போது உங்களுக்கு அறிவிப்பை அனுப்புவோம். சூழல்களுக்கு எது பொருத்தமானது என்பதைப் பொறுத்து அறிவிப்பின் வகை இருக்கும். உதாரணமாக, Spotify சேவையில் ஒரு தெளிவான அறிவிப்பை நாங்கள் காட்டலாம் அல்லது மின்னஞ்சல்/சாதன அறிவிப்பை உங்களுக்கு அனுப்பலாம்.
5. எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்
இந்தக் கொள்கையைப் படித்ததற்கு நன்றி. இந்தக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகளோ கருத்துகளோ இருந்தால், எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் தொடர்புகொள்ளவும்:
- privacy@spotify.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
- Spotify AB, Regeringsgatan 19, 111 53 Stockholm, Sweden என்ற முகவரிக்குக் கடிதம் அனுப்பவும்
Spotify பயன்படுத்தி மகிழ்கிறீர்கள் என நம்புகிறோம்!
© Spotify AB.