அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

உறுதிப்பாட்டு அறிக்கை

Spotifyயில் நாங்கள் மனிதப் படைப்பாற்றலைக் கொண்டாடுகிறோம். மேலும், எங்கள் தளம் அனைத்து மக்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருப்பதற்காகக் கடினமாகப் பணியாற்றுகிறோம். நிபணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அணுகல்தன்மை தொடர்பான வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்களைப் பணியமர்த்துதல் ஆகியவற்றின் மூலம் எங்கள் தயாரிப்புகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்குக் கடினமாகப் பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, அனைவரும் உருவாக்க, கண்டுபிடிக்க மற்றும் உத்வேகத்துடன் இருக்க உதவுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

எங்கள் தளத்தைப் போலவே எங்கள் பணியிடமும் அனைவருக்குமானதாகும். உங்கள் இயல்பின்படியே உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் தோற்றம் எப்படியிருக்கிறது, உங்கள் ஹெட்ஃபோன்களில் என்ன பிளேயாகிறது போன்றவற்றின் அடிப்படையில் நாங்கள் மதிப்பிடுவதில்லை.

எங்கள் பணியிடம், தளம், பயனர்கள் ஆகிய அனைத்திலும் அணுகல்தன்மையைக் கடைபிடிக்க நாங்கள் உறுதிகொண்டுள்ள விதம் இதோ:

எங்கள் பணியாளர்கள்: Spotify பணியிடங்களில் எத்தனை விதமான கண்ணோட்டங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி, முக்கியத்துவம் அளிக்கிறோமோ அந்தளவிற்கு நாங்கள் அனைவரும் பங்களித்து, வளர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவோம். உலகெங்கிலும் உள்ள எங்கள் மக்களுக்காகச் செய்யும் அனைத்து விஷயங்களிலும் அணுகல்தன்மையை உள்ளடக்குவதில் உறுதியாக உள்ளோம். ‘Heart & Soul’ என்கிற எங்களின் உலகளாவிய மனநல முன்னெடுப்பை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம். மேலும் உலகெங்கிலும் உள்ள எங்கள் அலுவலகங்களை அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கேட்பவர்கள்: உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வின் ஓர் அங்கமாக Spotify உள்ளது. எங்கள் தளம் அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள்: எங்கள் தளம் சக்தி வாய்ந்ததாகும். உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் குரல்கள், கதைகள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரபலப்படுத்த நாங்கள் இதைப் பயன்படுத்துகிறோம். இயலாமைகள் கொண்ட கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான எங்கள் ஆதரவை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம். மேலும் அவர்களின் திறமைகளைப் பகிர்ந்துகொள்ள எங்கள் தளத்தைப் பயன்படுத்துவோம்.

நாங்கள் கடைப்பிடிக்கவும் பொறுப்பேற்கவும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய திட்டத்தை வழங்குவதை விட இந்த யோசனைகளைச் செயல்களாக மாற்றுவதற்குச் சிறந்த வழி வேறு எதுவுமில்லை.