ஒரு தலையின் உள்ளே வண்ணமயமான, கற்பனை நிறைந்த இயற்கைக் காட்சியைக் காட்டும் விளக்கப்படம்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையம்

கொடூரமான தீவிரவாதம் தொடர்பான எங்களின் அணுகுமுறை

கலைஞர்கள் தங்களின் கலை மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் அவர்களின் கோடிக் கணக்கான ரசிகர்கள் அந்தக் கலையை ரசித்து அதன் மூலம் ஊக்கம் பெறுவதற்குமான வாய்ப்பை வழங்குவதே Spotifyயின் நோக்கமாகும். இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்த அனுபவம் படைப்பாளர்கள், கேட்பவர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் மகிழச்சியானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த எங்களின் உலகளாவிய குழுக்கள் 24 மணிநேரமும் பணிபுரிகின்றனர்.

Spotifyயில் பெரும்பான்மையான கேட்கும் நேரம் உரிமம் பெற்ற உள்ளடக்கத்தைக் கேட்பதிலேயே செலவழிக்கப்படுகிறது. உள்ளடக்கத்தை யார் உருவாக்கியிருந்தாலும், எங்கள் சமூகத்தை அவர்கள் விரும்பும் இசை, பாட்காஸ்ட்டுகள், ஆடியோபுக்குகள் ஆகியவற்றுடன் நேரடியாக இணையச் செய்வதற்கே நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். எனினும், எந்தவித உள்ளடக்கமாக இருந்தாலும் எங்கள் தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என அர்த்தமல்ல.

பயங்கரவாதம் அல்லது வன்முறையான தீவிரவாதத்தைப் பரப்பும் உள்ளடக்கத்தை Spotify தடைசெய்யும் மற்றும் எங்கள் தளத்தின் விதிகளையோ சட்டத்தையோ மீறுகிற உள்ளடக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்.

வன்முறையான தீவிரவாதத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அந்தத் தரப்பினரின் தளச் செயல்பாடுகள் மற்றும் நிஜ வாழ்வு நடத்தைகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்வோம். வன்முறைச் செயல்பாடு, வன்முறையைத் தூண்டுதல் போன்றவை இதிலடங்கும் (ஆனால் இவை மட்டுமல்ல). உள்ளூர், பிராந்திய மற்றும் கலாசாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தச் செயல்முறைகள் முழுவதிலும் நாங்கள் புரிதலுடன் முடிவுகளை எடுப்பதை உறுதிசெய்வதற்காக, தீவிரவாதம் தொடர்பான நிபுணத்துவம் கொண்ட மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.

சாத்தியமிக்க வன்முறையான தீவிரவாத உள்ளடக்கத்தை நாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்கைகளின் மூலம் ஆராய்வோம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):

  • இனம், பாலினம், பூர்வீகம், பாலியல் ஈர்ப்பு போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புக்கூறுகளின் அடிப்படையில் நபர்களின் மீது வன்முறையையோ வெறுப்பையோ தூண்டும் உள்ளடக்கத்தை எங்களின் வெறுப்பு தொடர்பான கொள்கைகள் தடைசெய்கின்றன.
  • பயங்கரவாதத்தையோ வன்முறையான தீவிரவாதத்தையோ பரப்பும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம் Spotify தளத்தில் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்பதை ஆபத்தான உள்ளடக்கம் தொடர்பான எங்களின் கொள்கைகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

கொள்கைகளை மீறும் சாத்தியமுள்ள உள்ளடக்கத்தை, மனித நிபுணத்துவம் மற்றும் பயனர் புகார்களின் துணையோடு, முன்கூட்டியே கண்டறியும் கண்காணிப்பு முறைகளைப் பயன்படுத்தி நாங்கள் மதிப்பாய்வு செய்வதற்கு அடையாளம் காண்கிறோம். அதிகரித்து வரும் தவறான பயன்பாடு தொடர்பான போக்குகளைக் கண்காணித்து எங்களின் அணுகுமுறையை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, உலகளாவிய மூன்றாம் தரப்பு நிபுணர்களின் புள்ளிவிவரங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.

அமலாக்க நடவடிக்கையைப் பொறுத்தவரை நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். உள்ளடக்கத்தையோ படைப்பாளரையோ அகற்றுதல், விநியோகத்தைக் குறைத்தல், வருமானம் ஈட்டுதலை முடக்குதல் போன்றவை இதிலடங்கும். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்போது, நிஜ வாழ்வில் அந்த உள்ளடக்கம் தீங்கிழைக்கக்கூடிய அபாயத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். கூடுதல் காரணிகளில் இவையும் அடங்கும்:

  • பிராந்தியம் சார்ந்த சூழலோ தனித்துவமான தகவலோ உள்ளதா?
  • நிஜ வாழ்வில் தீங்கு விளைவிப்பதற்கான அபாயத்தை இந்த உள்ளடக்கம் அதிகரிக்குமா?
  • உள்ளடக்கத்தின் தன்மை என்ன (உதாரணமாக இது செய்தி அல்லது ஆவணப் படமா? நகைச்சுவை அல்லது நையாண்டியா?)
  • பேசுபவர் தனது தனிப்பட்ட வாழக்கை அனுபவம் குறித்துப் பேசுகிறாரா?

கூடுதலாக, பயனர்கள் வன்முறையான தீவிரவாத உள்ளடக்கத்தைத் தேடும்போது, வன்முறையான உள்ளடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கும் தகவல்மூலங்கள் உள்ள ஹப்களுக்கு அவர்கள் திருப்பிவிடப்படலாம். இந்த ஆவணம் Spotify Safety Advisory Council உட்பட மூன்றாம் தரப்பு நிபுணர்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டதாகும். இது தாங்கள் பயன்படுத்தும் உள்ளடக்கத்தைத் தீவிரமாக மதிப்பாய்வு செய்யுமாறு பயனர்களை ஊக்குவிக்கிறது.

இந்த விஷயம் நுணுக்கமானது, சிக்கலானது மற்றும் எப்போதும் பரிணமித்துக்கொண்டே இருப்பது. வன்முறையான தீவிரவாத உள்ளடக்கத்தைத் தளத்தில் அனுமதிக்காமல் இருப்பதற்கு வலியுறுத்துவதிலும் அது தொடர்பான எங்கள் அணுகுமுறையை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்பு தொடர்பான எங்கள் பணி குறித்து இங்கே மேலும் படிக்கலாம்.