பாதுகாப்பு & தனியுரிமை மையம்

Spotifyயில் உள்ளடக்கம் குறித்துப் புகாரளித்தல்

முன்னோட்டம்

Spotifyயில் ஆக்கப்பூர்வமான படைப்புகளை மேம்படுத்த நாங்கள் கடினமாக உழைக்கிறோம், மேலும் நமது சமூகம் தங்களை உண்மையான உணர்வுகளைப் பாதுகாப்பாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக எது வேண்டுமானாலும் அனுமதிக்கப்படும் என்பது இதன் அர்த்தமல்ல.

Spotifyயில் எது அனுமதிக்கப்படும், அனுமதிக்கப்படாது என்பதை நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும் எங்கள் தளத்தின் விதிகள் கூறுகின்றன. சிறாரைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கம், நிஜவாழ்வில் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கம் அல்லது சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கம் அல்லது தளத்தின் விதிகளை மீறும் உள்ளடக்கத்திற்கு எதிராக என்னென்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

எங்கள் தளத்தின் விதிகளை மீறுகிற அல்லது உள்ளூர் சட்டப்படி சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். உள்ளடக்கத்தை அகற்றுதல், விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல், உள்ளடக்கம் குறித்த அறிவுரை லேபிள்களை வழங்குதல் மற்றும்/அல்லது வருமானம் ஈட்டுதலை முடக்குதல் இந்த நடவடிக்கைகளில் அடங்கக்கூடும்.

Spotifyயில் உள்ளடக்கம் குறித்துப் புகாரளிப்பது எப்படி?

ஏதேனும் உள்ளடக்கம் எங்கள் தளத்தின் விதிகளை மீறுவதாக நீங்கள் கருதினால், எங்களின் பாதுகாப்பான புகாரளிக்கும் படிவத்தின் மூலம் அது குறித்துப் புகாரளிக்கவும்.

உங்கள் அறிவுசார் உடைமை தொடர்பான உரிமைகள் அல்லது சட்டத்தை மீறுவதாக நீங்கள் கருதும் உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்க எங்களைத் தொடர்புகொள்ளவும். அறிவுசார் உடைமை மீறலைக் கையாள்வது தொடர்பான Spotifyயின் கொள்கை குறித்த கூடுதல் தகவல்களை எங்களின் பதிப்புரிமைக் கொள்கையில் காணலாம்.

உள்ளடக்கம் குறித்து யார் புகாரளிக்கலாம்?

மின்னஞ்சல் முகவரி கொண்டுள்ள யார் வேண்டுமானாலும் Spotifyயில் உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கலாம் (அவர்களிடம் Spotify கணக்கு இல்லையென்றாலும்). எங்களின் புகாரளிக்கும் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான உங்கள் திறன் கட்டுப்படுத்தப்படலாம்.

உள்ளடக்கம் மீதான முடிவுகள் குறித்து மறுபரிசீலனைக்குக் கோரலாமா?

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவராக இருந்து, உங்கள் உள்ளடக்கத்தின் மீதோ உங்கள் புகார் தொடர்பாகவோ தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீங்கள் கருதினால், அடுத்து செய்ய வேண்டியவற்றிற்கு நீங்கள் பெற்ற அறிவிப்பைப் பார்க்கவும்.

மறுபரிசீலனை செய்யக் கோரும் வசதியையும் அதற்கான விருப்பத்தேர்வுகளையும் மற்ற அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் தொடர்ந்து விரிவாக்குவோம். இது இடத்தைப் பொறுத்து மாறுபடும்.