தனியுரிமை மையம்

சிறந்த கேட்டல் அனுபவத்தை உருவாக்க Spotify தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறது. உங்கள் தரவு தொடர்பான உரிமைகள் குறித்து மேலும் அறிக.

  • Spotify தனியுரிமை குறித்துப் புரிந்துகொள்ளுதல்
  • நாங்கள் எந்தத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்?
  • நாங்கள் எதற்காகத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்?
  • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிப் பாதுகாக்கிறோம்?
  • உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிப் பகிர்கிறோம் / பரிமாற்றுகிறோம்?
  • உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான உரிமைகள்
  • உங்கள் தரவைக் கட்டுப்படுத்துதல்
  • எங்கள் கொள்கைகள்
  • எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்

Spotify தனியுரிமை குறித்துப் புரிந்துகொள்ளுதல்

Spotifyயில் உங்களுக்குச் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். இதைச் செய்ய, உங்களுக்கான பிரத்தியேக Spotify சேவையை வழங்குவதற்கும் கேட்பவர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் சிறந்த ஆடியோ தளத்தை உருவாக்குவதற்கும் உங்களைப் பற்றிய சில தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் தரவையும் அதன் தனியுரிமையையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும் அறிய, கீழே உள்ள தனியுரிமை தொடர்பான தகவல் மூலங்களையும் இந்தப் பக்கத்தில் உள்ள வீடியோவையும் பார்க்கவும்.

  1. எங்கள் தனியுரிமைக் கொள்கையின் முக்கியக் கூறுகளைப் பயனர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் இடம் எங்கள் தனியுரிமை மையமாகும். இதில் நாங்கள் சேகரிக்கும் தரவு, அதை நாங்கள் பயன்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் விதம், அவற்றின் மீதான உங்கள் உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
  2. அனைத்து முக்கியமான விவரங்களும் எங்களின் முழுமையான தனியுரிமைக் கொள்கையில் உள்ளன.
  3. எங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான Spotify உதவிப் பக்கங்களில் கூடுதல் உதவியையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும் பெறலாம்.
  4. உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

என்னைப் பற்றிய எந்தத் தனிப்பட்ட தரவை Spotify சேகரிக்கிறது?

நாங்கள் உங்களைப் பற்றிய எந்தத் தனிப்பட்டத் தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிச் சேகரிக்கிறோம், அது ஏன் அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

பின்வரும் வழிகளில் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்:

  1. நீங்கள் Spotify சேவைக்குப் பதிவுசெய்யும்போது அல்லது உங்கள் கணக்கைப் புதுப்பிக்கும்போது - Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Spotify கணக்கை உருவாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்போம். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, உங்கள் சுயவிவரப் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் இதிலடங்கும்.
  2. Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் - Spotify சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதோ அணுகும்போதோ உங்கள் செயல்பாடுகள் குறித்த தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்துச் செயலாக்குவோம். நீங்கள் பிளே செய்த பாடல்கள், உருவாக்கிய பிளேலிஸ்ட்டுகள் போன்றவை இந்தத் தரவில் அடங்கும். இது எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் உள்ள பயன்பாட்டுத் தரவு வகையாகும்.
  3. நீங்கள் எங்களுக்கு வழங்குவதற்குத் தேர்வுசெய்த தனிப்பட்ட தரவு - அவ்வப்போது நீங்களும் எங்களுக்குக் கூடுதல் தனிப்பட்ட தரவை அல்லது அதைச் சேகரிப்பதற்கான அனுமதியை வழங்கக்கூடும், உதாரணமாக, உங்களுக்கு கூடுதல் அம்சங்களையும் செயல்பாடுகளையும் வழங்குவதற்காக. தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள குரல் தரவு, பேமெண்ட் மற்றும் பர்ச்சேஸ் தரவு, கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வுத் தரவு ஆகியவையும் இதிலடங்கும்.
  4. மூன்றாம் தரப்பு மூலங்களில் இருந்து நாங்கள் பெறும் தனிப்பட்ட தரவு - வேறு ஒரு சேவையைப் பயன்படுத்தி Spotifyயில் பதிவுசெய்யும்போதோ உங்கள் Spotify கணக்கை மூன்றாம் தரப்புச் செயலி, சேவை அல்லது சாதனத்துடன் இணைக்கும்போதோ அந்த மூன்றாம் தரப்பினரிடமிருந்து உங்கள் தரவைப் பெறுவோம். தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள், பேமெண்ட் கூட்டாளர்கள், விளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டாளர்கள் ஆகியோரிடமிருந்தும் நாங்கள் உங்கள் தரவைப் பெறக்கூடும். கூடுதல் தகவல்களுக்கு தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-ஐப் பார்க்கவும்.

இந்தத் தனிப்பட்ட தரவை Spotify ஏன் சேகரிக்கிறது மற்றும் பயன்படுத்துகிறது?

பின்வரும் காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம்:

  • Spotify சேவையை வழங்குவதற்கு
  • Spotify சேவையின் விருப்பத்திற்குட்ப்பட்ட குறிப்பிட்ட சில கூடுதல் அம்சங்களை வழங்குவதற்கு
  • Spotify சேவையில் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவதற்கு, கண்டறிவதற்கு, பிழையறிந்து திருத்துவதற்கு மற்றும் சரிசெய்வதற்கு
  • Spotify சேவைக்கான புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு மற்றும் உருவாக்குவதற்கு
  • சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் நோக்கங்களுக்காக
  • சட்டப்பூர்வக் கடமைகள் மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் கோரிக்கைகளுடன் இணங்குவதற்கு
  • மூன்றாம் தரப்பினருடனான ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு
  • அறிவுசார் உடைமை மீறல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான புகார்கள் தொடர்பாகத் தக்க நடவடிக்கையை எடுப்பதற்கு
  • சட்டப்பூர்வ உரிமைகோரல்களை உருவாக்குவதற்கு, பயன்படுத்துவதற்கு அல்லது நியாயப்படுத்துவதற்கு
  • வணிகத் திட்டமிடல், அறிக்கை தயாரித்தல், முன்கணித்தல் ஆகியவற்றுக்கு
  • உங்கள் பேமெண்ட்டைச் செயலாக்குவதற்கு
  • மோசடியைக் கண்டறிந்து தடுப்பதற்கு. எ.கா. மோசடியான முறையில் Spotify சேவையைப் பயன்படுத்துதல்
  • ஆய்வு மற்றும் கருத்துக்கணிப்புகள் நடத்துவதற்கு

உங்கள் தனிப்பட்ட தரவை Spotify ஏன் பயன்படுத்துகிறது மற்றும் அதைச் செய்வதற்கான சட்ட அடிப்படை குறித்த கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 4-ஐப் பார்க்கவும்.

Spotify எனது தனிப்பட்ட தரவை எப்படிப் பாதுகாக்கிறது?

எங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க உதவும் வகையில் பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன அளவிலான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளோம். இருப்பினும், எந்த அமைப்பும் எப்போதும் முழுமையான பாதுகாப்பை வழங்காது என்பதை நினைவில்கொள்ளவும்.

அங்கீகரிக்கப்படாத அணுகல், எங்கள் சிஸ்டங்களில் தனிப்பட்ட தரவைத் தேவையின்றித் தக்கவைத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தியுள்ளோம். புனைப் பெயரைப் பயன்படுத்துதல், என்க்ரிப்ஷன் செய்தல், அணுகுதல் மற்றும் தக்கவைத்தல் தொடர்பான கொள்கைகளும் இதிலடங்கும்.

உங்கள் பயனர் கணக்கைப் பாதுகாக்க, நாங்கள் பரிந்துரைப்பவை:

  • நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான கடவுச்சொல்லை உங்கள் Spotify கணக்கிற்குப் பயன்படுத்தவும்
  • உங்கள் கடவுச்சொல்லை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது
  • உங்கள் கணினி மற்றும் உலாவிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும்
  • பகிரப்பட்ட சாதனங்களில் Spotify சேவையைப் பயன்படுத்தி முடித்தவுடன் அவற்றிலிருந்து வெளியேறிவிடவும்
  • உங்கள் கணக்கைப் பாதுகாத்தல் என்ற பக்கத்தில் இது குறித்த கூடுதல் தகவல்களைப் படித்துப்பார்க்கவும்

மேலும் விவரங்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 8-ஐப் பார்க்கவும்.

Spotify எனது தனிப்பட்ட தரவை எப்படிப் பகிர்கிறது / பரிமாற்றுகிறது?

நாங்கள் உலகளவில் வணிகத்தை மேற்கொள்வதால், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உங்கள் தனிப்பட்ட தரவை Spotify சர்வதேச அளவில் அதன் துணை நிறுவனங்கள், துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிரும். ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்கள் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொருந்தக்கூடிய சட்டங்களைப் போல் வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டிராத நாடுகளிலும் அவர்கள் உங்கள் தரவைச் செயலாக்கக்கூடும். உதாரணமாக, உங்கள் தரவின் மீதான உங்களின் உரிமைகள் மாறுபடலாம்.

சர்வதேச அளவில் தனிபட்ட தரவை நாங்கள் பரிமாற்றும்போது, பின்வரும் நோக்கங்களுக்காக நாங்கள் கருவிகளைப் பயன்படுத்துவோம்:

  • பொருந்தக்கூடிய சட்டத்துடன் தரவுப் பரிமாற்றம் இணங்கியிருப்பதை உறுதிசெய்தல்
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அதே பாதுகாப்பு நிலையை உங்கள் தரவுக்கும் வழங்க உதவுதல்

தனிப்பட்ட தரவைச் சர்வதேச அளவில் பரிமாற்றும்போது நாங்கள் பின்பற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 7-ஐப் பார்க்கவும்.

உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான உரிமைகள்

ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட தரவின் மீதான உரிமைகளைத் தனியுரிமைச் சட்டங்கள் (பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) உட்பட) வழங்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இவை கீழே விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் உரிமைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது உட்பட மேலும் விரிவான தகவல்களுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 2-ஐப் பார்க்கவும்.

உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுதல்

நாங்கள் செயலாக்கும் உங்களுடைய தனிப்பட்ட தரவிற்கான அணுகலைக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

தெரிந்துகொள்ளுதல்

நாங்கள் செயலாக்கும் உங்களுடைய தனிப்பட்ட தரவையும் அவை செயலாக்கப்படும் விதத்தையும் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் தனிப்பட தரவில் மாற்றங்களைச் செய்தல்

துல்லியமற்ற அல்லது முழுமையற்ற உங்கள் தனிப்பட்ட தரவைத் திருத்தவோ மாற்றவோ எங்களிடம் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் தனிப்பட்ட தரவு அனைத்தையும் அல்லது சிலவற்றை மட்டும் நாங்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ செயலாக்குவதை நிறுத்தும்படிக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல்

உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதற்கு உங்களின் குறிப்பிட்ட சூழலை அடிப்படையாகக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

பிரத்தியேக விளம்பரப்படுத்தலுக்கு மறுப்பு தெரிவித்தல்

பிரத்தியேக விளம்பரப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவு செயலாக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

தானியங்கு முடிவெடுத்தலுக்கு மறுப்பு தெரிவித்தல்

உங்களுக்குச் சட்டரீதியான அல்லது அதற்குச் சமமான குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தானியங்கு முடிவெடுத்தல் செயல்முறையின் முடிவை (சுயவிவரக் குறிப்பு உருவாக்குதல் உட்பட) முற்றிலும் சாராதிருக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பரிமாற்றுதல்

உங்கள் தனிப்பட்ட தரவின் நகலை மின்னணு வடிவில் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. மேலும் வேறொரு தரப்பின் சேவையில் பயன்படுத்தும் பொருட்டு அந்தத் தரவைப் பரிமாற்றுவதற்கான உரிமையையும் உங்களுக்கு உள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவை நீக்குதல்

உங்கள் தனிப்பட்ட தரவை நீக்குமாறு எங்களிடம் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல்

உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்பது அல்லது பயன்படுத்துவது தொடர்பாக நீங்கள் அளித்த ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

புகாரளித்தல்

ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால் தனியுரிமைப் பாதுகாப்பிற்கான ஸ்வீடன் ஆணையத்தையோ உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தையோ தொடர்புகொள்வதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

Spotify எந்தத் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்த நான் எங்கே செல்ல வேண்டும்?

  1. தனியுரிமை அமைப்புகள் பக்கம் - குறிப்பிட்ட தனிப்பட்ட தரவைச் (பிரத்தியேக விளம்பரங்கள் உட்பட) செயலாக்குவதைக் கட்டுப்படுத்தலாம்.
  2. அறிவிப்பு அமைப்புகள் பக்கம் - Spotifyயில் இருந்து எந்த வகையான மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை அமைக்கலாம்.
  3. அமைப்புகள் (Spotifyயின் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான பதிப்புகளில் இருக்கும்) - “சமூகம்”, “பாலியல் சார்ந்த வெளிப்படையான உள்ளடக்கம்” போன்ற Spotify சேவையின் குறிப்பிட்ட அம்சங்களைக் கட்டுப்படுத்தலாம். “சமூகம்” என்னும் அமைப்பில் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
    • தனிப்பட்ட அமர்வைத் தொடங்கலாம்
    • Spotifyயில் நீங்கள் என்னென்ன கேட்கிறீர்கள் என்பதை உங்களைப் பின்தொடர்பவர்களுடன் பகிர வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம் மற்றும்
    • சமீபத்தில் பிளே செய்த கலைஞர்களை உங்கள் பொதுச் சுயவிவரத்தில் காட்ட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்

    “பாலியல் சார்ந்த வெளிப்படையான உள்ளடக்கம்” எனும் அமைப்பில் உங்கள் Spotify கணக்கில் 'வெளிப்படையானது' எனத் தரமதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தைப் பிளே செய்யலாமா என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

எங்கள் கொள்கைகள்

Spotifyயில் உங்களுக்குச் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கிட நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். இந்தச் சேவையை உங்களுக்கு வழங்கும்போது நாங்கள் பயன்படுத்தும் கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்

இந்தப் பக்கத்தைப் பற்றி ஏதேனும் கேள்விகளோ கருத்துகளோ இருந்தால், எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைப் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் தொடர்புகொள்ளவும்:

  • privacy@spotify.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
  • அஞ்சல் முகவரி: Spotify AB, Regeringsgatan 19, 111 53 Stockholm, Sweden