பாதுகாப்பு & தனியுரிமை மையம்

தனியுரிமை

உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரித்தல்

நாங்கள் உங்களைப் பற்றிய எந்தத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிச் சேகரிக்கிறோம், அது ஏன் அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

பின்வரும் வழிகளில் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்:

  1. நீங்கள் Spotify சேவைக்குப் பதிவுசெய்யும்போது அல்லது உங்கள் கணக்கைப் புதுப்பிக்கும்போது - Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Spotify கணக்கை உருவாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்போம். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, உங்கள் சுயவிவரப் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் இதிலடங்கும்.
  2. Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் - Spotify சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதோ அணுகும்போதோ உங்கள் செயல்பாடுகள் குறித்த தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்துச் செயலாக்குவோம். நீங்கள் பிளே செய்த பாடல்கள், உருவாக்கிய பிளேலிஸ்ட்டுகள் போன்றவை இந்தத் தரவில் அடங்கும். இது எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் உள்ள பயன்பாட்டுத் தரவு வகையாகும்.
  3. நீங்கள் எங்களுக்கு வழங்குவதற்குத் தேர்வுசெய்த தனிப்பட்ட தரவு - அவ்வப்போது நீங்களும் எங்களுக்குக் கூடுதல் தனிப்பட்ட தரவை அல்லது அதைச் சேகரிப்பதற்கான அனுமதியை வழங்கக்கூடும், உதாரணமாக, உங்களுக்குக் கூடுதல் அம்சங்களையும் செயல்பாடுகளையும் வழங்குவதற்காக. தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள குரல் தரவு, பேமெண்ட் மற்றும் பர்ச்சேஸ் தரவு, கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வுத் தரவு ஆகியவையும் இதிலடங்கும்.
  4. மூன்றாம் தரப்பு மூலங்களில் இருந்து நாங்கள் பெறும் தனிப்பட்ட தரவு - வேறு ஒரு சேவையைப் பயன்படுத்தி Spotifyயில் பதிவுசெய்யும்போதோ உங்கள் Spotify கணக்கை மூன்றாம் தரப்புச் செயலி, சேவை அல்லது சாதனத்துடன் இணைக்கும்போதோ அந்த மூன்றாம் தரப்பினரிடமிருந்து உங்கள் தரவைப் பெறுவோம். தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள், பேமெண்ட் கூட்டாளர்கள், விளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டாளர்கள் ஆகியோரிடமிருந்தும் நாங்கள் உங்கள் தரவைப் பெறக்கூடும். கூடுதல் தகவல்களுக்கு தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 3-ஐப் பார்க்கவும்.