Spotifyயில் ஆடியோபுக்குகள்
நீங்கள் கேட்கும் அனைத்திற்குமான ஒரே இடம்
உங்கள் இசைக்கு அருகிலேயே ஆடியோபுக்குகள் காட்டப்படும். உங்கள் சாதனங்கள் அனைத்திலும் கேட்கலாம், பயணத்திலோ வீட்டிலோ இருக்கும்போது ஒரு வார்த்தையைக் கூடத் தவறவிடாதீர்கள்.
மாதாந்திரக் கேட்கும் நேரம்
Audiobooks+ கூடுதல் பேக்கேஜ் மூலம், எங்கள் சந்தாதாரர் பட்டியலில் உள்ள ஆடியோபுக்குகளைப் பிளே செய்ய ஒவ்வொரு மாதமும் கேட்கும் நேரம் கிடைக்கும். கேட்கும் நேரம் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.
லட்சக்கணக்கான ஆடியோபுக்குகள்
கிளாசிக் படைப்புகள் முதல் அனைத்து வகைகளிலும் புதிய வெளியீடுகள் வரை, நீங்கள் அடுத்து வாசிக்கக் கூடியதை Spotifyயில் கண்டறியுங்கள்.
Spotifyயில் ஆடியோபுக்குகளை அணுகும் விதம்
- எனக்கென Premium திட்டம் உள்ளது
எங்கள் சந்தாதாரர் பட்டியலை அணுக நீங்கள் Audiobooks+ வாங்கலாம்.
✓ ஒவ்வொரு மாதமும் உங்கள் பில்லிங் தேதியன்று கேட்கும் நேரம் புதுப்பிக்கப்படும்; பயன்படுத்தப்படாத கேட்கும் நேரம் காலாவதியாகிவிடும், அடுத்த மாதத்துடன் சேர்க்கப்படாது.
✓ எங்கள் சந்தாதாரர் பட்டியலில் உள்ள எந்தவொரு ஆடியோபுக்கிற்கும் கேட்கும் நேரத்தைப் பயன்படுத்தலாம்.
✓ ஒவ்வொரு மாதமும் கூடுதலாகக் கேட்கும் நேரத்தைப் பெற Audiobooks+ கூடுதல் பேக்கேஜைச் சேர்க்கலாம்.
✓ ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கேட்கும் நேர டாப்-அப்களை வாங்கலாம் அல்லது ஒவ்வொரு ஆடியோபுக்கிற்கும் தனித்தனியாக அணுகலை வாங்கலாம்.
நீங்கள் Premium Family அல்லது Duo திட்டத்தின் திட்ட மேலாளராக இருந்தால் இவை அனைத்தும் பொருந்தும். ஆனால் சேர்க்கப்பட்ட கேட்கும் நேரம் உங்கள் கணக்கிற்கு மட்டுமே உரியவை, திட்ட உறுப்பினர்களுடன் பகிரப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் அறிக. - நான் வேறொருவரின் Premium Family அல்லது Duo திட்டத்தில் உள்ளேன்
Audiobooks+ கூடுதல் பேக்கேஜ் மூலம் உங்கள் திட்ட மேலாளரிடம் ஆடியோபுக் கேட்கும் நேரத்தை நீங்கள் கோரலாம்.
✓ Audiobooks+ கூடுதல் பேக்கேஜ் மூலம் உங்கள் திட்ட மேலாளர் உங்களுக்கு ஆடியோபுக் கேட்கும் நேரத்திற்கான அணுகலை வழங்க முடியும்.
✓ ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கேட்கும் நேர டாப்-அப்களை வாங்கலாம் அல்லது ஒவ்வொரு ஆடியோபுக்கிற்கும் தனித்தனியாக அணுகலை வாங்கலாம்.
✓ எந்தவொரு ஆடியோபுக்கின் மாதிரியையும் நீங்கள் இலவசமாகக் கேட்கலாம்.
உங்கள் திட்ட மேலாளரிடம் Audiobooks+ கேளுங்கள். - Premium Student திட்டத்தில் உள்ளேன்
Premium Student திட்டத்தில் ஆடியோபுக் கேட்கும் நேரம் கிடைக்காது.
✓ நீங்கள் ஒவ்வொரு ஆடியோபுக்கிற்கும் தனித்தனியாக அணுகலை வாங்கலாம்.
✓எந்தவொரு ஆடியோபுக்கின் மாதிரியையும் நீங்கள் இலவசமாகக் கேட்கலாம். - Spotifyயின் இலவசத் திட்டத்தில் (விளம்பரங்களைக் கொண்டது) உள்ளேன்
எங்கள் சந்தாதாரர் பட்டியலை அணுக நீங்கள் Audiobooks+ வாங்கலாம்.
✓ நீங்கள் ஒவ்வொரு ஆடியோபுக்கிற்கும் தனித்தனியாக அணுகலை வாங்கலாம்.
✓ எந்தவொரு ஆடியோபுக்கின் மாதிரியையும் நீங்கள் இலவசமாகக் கேட்கலாம்.
மாதாந்திரக் கேட்கும் நேரத்தையும் எங்கள் சந்தாதாரர் பட்டியலுக்கான அணுகலையும் பெற, உங்கள் இலவசத் திட்டத்தில் Audiobooks+ கூடுதல் பேக்கேஜையும் சேர்க்கலாம்.